Breaking News

யாழ்.ஊடகவியலாளர்கள் குழப்பவாதிகள் – அரச அதிபர் கண்டுபிடிப்பு

யாழில் உள்ள ஊடகவியலாளர்கள் குழப்பவாதிகள் எனவும் அவர்களால் தான் இங்கு அனைத்து பிரச்சனைகளும் ஏற்படுகின்றன எனவும் யாழ்.மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இவ்வாறு கூறியே யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற சுன்னாகம் கழிவோயில் பிரச்சனை சம்பந்தமான கூட்டத்திலும் ஊடகவியளாளர்களை அனுமதிக்க மறுத்துள்ளார்.

குறித்த கூட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று காலை ஆரம்பமாகிய போது குறித்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் அனுமதிக்காக வெளியே காத்திருந்துள்ளனர். இதன் போதே அவ்வழியே வந்த வடக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமாகிய சி.வி. விக்னேஸ்வரன் ஊடகவியலாளர்களை உள்ளே வருமாறு அழைத்துள்ளனர்.

எனினும் முதலமைச்சர் அங்கிருந்து சென்ற பிற்பாடு ஊடகவியலாளர்களுக்கு கூட்டத்திற்கு அனுமதியில்லை என கூறப்பட்டு தடுத்தும் நிறுத்தப்பட்டனர். தாம் தடுத்து நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை கேட்டறிய முற்பட்ட போது ஆளுநர் தான் தடுத்ததாகவும் அதனால் தான் உங்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை எனவும் மாவட்ட செயலக அதிகாரி சுதர்சன் என்பவர் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.

இதன் பின்னர் தாம் அனுமதிக்கப்படாமைக்கான காரணத்தை ஆளுநரின் செயலாளர் இளங்கோவனிடம் கேட்டறிய முற்பட்டனர். இதன் போது ஆளுநர் ஊடகவியலாலர்களுக்கு தடை விதிக்கவில்லை எனவும் அவ்வாறு தவறான தகவலை கூறியவர் யார் எனவும் ஊடகவியலாளர்களிடம் வினவியிருந்தார்.

ஆளுநர் தான் தடைவிதித்தார் என தம்மிடம் கூறிய யாழ்.மாவட்ட செயலக அதிகாரி சுதர்சன் என்பவரை ஊடகவியலாளர்கள் தேடிய முற்பட்ட வேளை அவர் அங்கிருந்து தலைமறைவாகியுமுள்ளார். இதன் பின்னர் கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படாமைக்கான காரணத்தை அரச அதிபரிடம் கேட்டுள்ளனர்.

இதற்கு ஆம். நான் தான் தடுத்தேன் அதற்கு என்ன ? நீங்கள் தான் எல்லாவற்றையும் குழப்பிக்கொண்டிருக்கின்றீர்கள். அதால தான் நான் தடுத்தேன் என பொறுப்பற்ற விதத்தில் திமிராக பதில் அளித்தார்.

மேலும் குறித்த யாழ்.மாவட்ட அரச அதிபர் முன்னர் முல்லைத்தீவில் அரச அதிபராக இருந்த போது வெளி ஓயாவில் சிங்கள குடியேற்றங்களை குடிஎர்ருவதில் மும்முரமாக செயற்பட்டதோடு காணிகள் மற்றும் பல கொள்ளைகளிலும் இவர் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.