9 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு 215 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு
இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பின்போது 19 ஆம் திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 215 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.
ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை என சபாநாயகர் சமல் ராஜபக்ஸ அறிவித்துள்ளார். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் குழுநிலை வாக்கெடுப்பும் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பும் நடைபெறவுள்ளன.