Breaking News

3ஆம் கட்ட மீள்குடியேற்றம் தொடர்பில் ஆராய்வு!

யாழ்.மாவட்ட செயலகத்தில் 3ஆம் கட்ட மீள்குடியேற்றம் தொர்பில் ஆராயும் கூட்டம் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை தலைமையில் இன்று நடைபெற்றது. 

 எதிர்வரும் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்படவுள்ள 570 ஏக்கர் நிலப்பரப்பினை அரச அதிபர் செயலர் குழுவினருடன் சென்று பார்வையிடவுள்ளதாகவும் பார்வையிட்ட பின் எந்தெந்த பிரதேச செயலக பிரவு,கிராம சேவையாளர் பிரிவு என தெரிவிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.