19வது திருத்தச் சட்டம் குறித்து விவாதம் நடத்த அனைத்துக் கட்சிகளும் இணக்கம்!
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் 21ம் 22ம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த அனைத்துக் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடந்த கட்சித் தலைவர்களுடனான விஷேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் 21, 22ம் திகதிகளில் குறித்த விவாதத்தை நடத்த அனைத்துக் கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி 19வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பாராளுமன்ற குறிப்பேட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள உயர்நீதிமன்ற பரிந்துரைகளுக்கு அமைவான திருத்தச் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதேவேளை பாராளுமன்றம் நாளை காலை 9.30க்கு கூடி, நாளை மறுதினம் வரை ஒத்திவைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.