Breaking News

19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்திற்கு அமைய 19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று பிரஸ்தாபிக்கப்படவுள்ளது

விவாதத்திற்கு முன்னதாக இன்று முற்பகல் ஒன்பது மணிக்கு அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அரசிலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான விவாத்தை அனைத்து கட்சிகளினதும் இணக்கப்பாட்டுடன் நடத்துவது குறித்து இதன்போது கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய திருத்தங்களை முன்வைப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்று நண்பகல் 12 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஏற்கனவே உயர்நீதிமன்றம் வழங்கிய உள்ள உத்தரவை மீறாத வகையில் இந்த திருத்தங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்தின் பிரதி பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க ஏற்கனவே இத்தகைய திருத்தமொன்றை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.