Breaking News

19வது திருத்தம் நிறைவேற்றப்படுமா? பாராளுமன்றம் கலைக்கப்படுமா?- நாளை தெரியும்!

19 வது திருத்தத்தை நிறைவேற்ற முடியாது போனால் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரியவருகின்றது. இதற்கான அழுத்தத்தை ஐ.தே.க.வும் கொடுத்துவருவதாகத் தெரியவந்திருக்கின்றது. நிலைமைகளை ஆராய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றும் நாளையும் அவசர கூட்டங்களைக் கூட்டியுள்ளார்.

19வது திருத்தத்தை நிறேவேற்ற வேண்டுமென்ற நிலைப்பாட்டினை ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் கொண்டுள்ள நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் அதனை நிறைவேற்றுவதற்காக தேர்தல் திருத்தம் உள்ளிட்ட நிபந்தனைகள் பலவற்றை முன்வைத்து அந்த நிபந்தனைகளை கடைபிடித்தே அதனை நிறைவேற்ற வேண்டுமென கூறிவருகின்றது.

இந்நிலைலயில் நாளை 20ம் திகதி பாராளுமன்றத்தில் 19ஐ சமர்ப்பித்து அதனை நிறைவேற்று வதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்ற போதும் எதிரணியினரின் நிபந்தனைகளால் 19ஐ நிறைவேற்றுவது சந்தேகத்தக்குறிய விடயமாக காணப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் அரசாங்கம் கலந்துரையாடி வருவதுடன் அவர் தலைமையில் அனைத்து கட்சி பிரதானிகளின் சந்திப்பொன்றும் இன்று அல்லது நாளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் 19ஐ நாளை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பான நாளைய தினம்; பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் 19ஐ நிறைவேற்ற முடியாது போனால் உடனடியாக பாராளுமன்றத்தை கலைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தெரிய வருகின்றது.