Breaking News

19, 20 திருத்தங்கள் நிறைவேறினால் மைத்திரியின் நல்லாட்சி வரலாற்றில் இடம்பிடிக்கும்!

அரசியலமைப்பின் 19வது திருத்தப் பிரேரணைக்கு மேலதிக தேர்தல் முறையை மற்றும் 20வது திருத்தம் மேற்கொள்ளப்படுமானால் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் ஆட்சி இலங்கை வரலாற்றில் முக்கியமாகப் பதிவாகுமென பாராளுமன்ற உறுப்பினர் டியூ குணசேகரா கூறியுள்ளார்.

இந்தப் பிரேரணை ஏப்ரல் 20, 21ம் திகதிகளில் விவாதத்துக்கு வரவுள்ளது. 100 நாள் திட்டத்தில் இது தீர்க்கமான வாக்குறுதிகளாகும். இது நிறைவேற்றப்படுமானால் ஒரு வரலாற்று திருப்பமான மாற்றமாக அமையும் என்றும் அவர் தொடர்ந்து தெரிவித்தார்.

19வது திருத்தத்துக்கு இருபிரதான அரசியற் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டியதில்லை. இரு கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் இது சேர்க்கப்பட்டுள்ளது. இதனை 6.2 மில்லியன், 5.7 மில்லியன் மக்கள் அங்கீகரித்துள்ளனர் என்றும் அவர் கூறினார். தேர்தல் முறையில் மாற்றம் தேவை. அவ்வாறின்றி தேர்தல் முறையை மாற்றாமல் 19வது திருத்தத்தைக் கொண்டுவருவது அர்த்தமற்றது என்று ஐ. ம. சு. முன்னணியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரைக் கேட்டுள்ளனர்.