18 சர்வதேச விருதுகளைக் குவித்து உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய கோர்ட்!
உலக நாடுகள் இந்திய சினிமாவை வியப்புடன் பார்க்கும் வகையில் பல இந்திய சினிமாக்கள் சர்வதேச அரங்கில் விருதுகளைக் குவித்து வருகிறது.
சமீபத்தில் திரைக்கு வந்து விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டினைப் பெற்றுள்ளது மராத்திய திரைப்படமான ‘கோர்ட்’.
சைதன்யா தம்கனே எழுதி இயக்கியுள்ள இந்த படத்திற்கு அர்ஜெண்டினாவின் புவனஸ் அயர்ஸ் நகரில் நடந்த 17-வது சர்வதேச திரைப்பட விழாவில் படத்தில் முதன்மையான கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த விவேக் கோம்பருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘கோர்ட்’ மும்பை, வியன்னா, அண்டால்யா, சிங்கப்பூர் என்று பல நகரங்களில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று இதுவரை 17 விருதுகளைப் பெற்றுள்ளது.
தற்போது மேலும் ஒரு சர்வதேச விருதை வென்றதன் மூலம் இந்திய சினிமாவை இன்னும் உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது கோர்ட்.