இலவச wifi திட்டம் ஆரம்பம்
இலவச wifi திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப் படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நிறுவனங்களில் ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகளுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். ஆரம்பக் கட்டமாக புறக்கோட்டையிலிருந்து இலவச திட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை பிரதமர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.