பாதைகள் புனரமைக்கப்பட்டு காட்சிப் பொருட்களாக்கப்பட்டன! விக்னேஸ்வரன்
கடந்த அரசாங்கம் வடக்கிலும் கிழக்கிலும் பிரதான வீதிகளை புனரமைத்து அதனை வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கு காட்சிப்பொருளாக்கியிருந்தாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குற்றம்சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் பெருமளவான உள்ளக வீதிகள் புனரமைக்கப் படாமலிருக்கின்றன யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு 20 புதிய பேருந்துகளை நேற்று வழங்கி வைக்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
குறித்த பேருந்துகளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பருத்தித்துறை, காரைநகர் ஆகிய சாலைகளில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்டமாக முதலமைச்சர் நாடாவை வெட்டி பேருந்துகளின் போக்குவரத்தை ஆரம்பித்து வைத்தார். இதனையடுத்து பேருந்துகளின் திறப்புகளை குறித்த பேருந்து சாலைகளின் முகாமையாளர்கள் பெற்றுக் கொண்டனர்.