Breaking News

இலங்கை அணியில் அதிரடி மாற்றங்கள்?

உலகக் கிண்ணத் தொடரில், தென்னாபிரிக்க அணிக்கெதிராக நாளை சிட்னியில் நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் இலங்கை அணியின் ரங்கன ஹேரத் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் குறைவென தெரிவிக்கப்படுகின்றது.

கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் அவர் இங்கிலாந்து அணியுடனான போட்டியின் பின்னர் எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை.

இந்நிலையில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு 50 வீதமே உள்ளதாக அணித் தலைவர் மெத்தியூஸ் தெரிவித்துள்ளார். ஹேரத்தை உடற்கூற்று நிபுணர் கண்காணித்து வருவதாகவும் மெத்தியூஸ் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஹேரத் விளையாடாத பட்சத்தில் அவருக்கு பதிலாக அணியில் யார் இடம்பெறுவார் என்பது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாகவுள்ளது.


ஏற்கனவே அணியில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . அதேபோல் இத்தொடரில் இலங்கை அணியின் பந்துவீச்சும் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இந்நிலையில் ஹேரத் விளையாடாமை அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகின்றது. ஹேரத்துக்கு பதிலாக தரிந்து கௌசால் விளையாடலாம் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை சீக்குகே பிரசன்ன விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.


இதேவேளை விளையாடலாம் என எதிர்ப்பார்க்கப்படும் அணி இதோ

1 Lahiru Thirimanne, 2 Tillakaratne Dilshan, 3 Kumar Sangakkara (wk), 4 Mahela Jayawardene, 5 Kusal Perera, 6 Angelo Mathews (capt), 7 Thisara Perara, 8 Seekkuge Prasanna/ Rangana Herath, 9 Nuwan Kulasekara, 10 Lasith Malinga, 11 Suranga Lakmal/ Dushmantha Chameera