தொடரும் இலங்கை கடற்படையினரின் தாக்குதல்! மீனவர்கள் அச்சத்தில்
கச்சத்தீவுப்பகுதியில் இலங்கை கடற்படையினரின் அணிவகுப்பால் அச்சம் அடைந்துள்ள ராமேஸ்வர மீன்வர்கள் மீன்பிடிக்கச்செல்லவில்லை, இதனால் துறைமுகமே வெறிச்சோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் 800 விசைபடகுகளும் 5 ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்களும் அதனை நம்பி சுமார் 50 ஆயிரம் சார்புதொழிலாளர்களும் உள்ள நிலையில் கச்சத்தீவுப்பகுதியில் இலங்கை இராணுவத்தின் அணிவகுப்பைக்கண்டு அச்சமுற்ற மீனவர்கள் நேற்று கடலில் வலைவிரிக்க முடியாமல் பெரும் நஸ்டத்தோடும் அச்சத்தோடும் கரை திரும்பினர்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல மீன்பிடிக்கச் செல்லும் பல ஆயிரக்கணக்கான மீன்பிடி தொழிலாளர்கள் மீன்பிடிக்கச் செல்ல முன்வராததால் பகல் பொழுதுவரை ஒரு படகுமே கடலுக்குச் செல்லவில்லை இதனால் பரபரப்பாக காட்சியளிக்கும் துறைமுகம் ஆள்ஆரவாரம் இன்றி வெறிச்சோடிக்காணப்பட்டது மேலும் அதனை சார்ந்த நிறுவனங்களும் பூட்டியே காணப்படுகிறது. இதனால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மீன்பிடி தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்தள்ளனர்
பேட்டி- சேகரன் மீன்பிடி தொழிலாளர் ராமேஸ்வரம்
தடைக்காலத்திற்கு இன்றும் இரண்டுவாரகாலம் உள்ளநிலையில் இலங்கை கடற்படையினரின் கடுமையான அச்சுறுத்தாலால் இன்று மீன்பிடி தொழிலாளாகளே ராமேஸ்வரம் துறைமுகத்திற்கு வரவில்லை எனக்குற்றம் சுமத்தியுள்ளனா் படகு உரிமையாளர்கள் இப்போதே தடைக்காலம் ஆரம்பித்துவிட்டால் இன்னும் 50 நாட்களுக்கு குழந்தைகளைவைத்தக் கொண்டு எப்படி நாங்கள் வாழமுடியும் எனக்கேள்வி எழுப்பியுள்ள மீன்பிடி தொழிலாளர்கள் பிழைப்பு இன்றி பட்டினிச்சாவுதான் ஏற்படும் என வேதனை தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொருநாளும் இலங்கை அரசாங்கள் எங்களை அச்சுறுத்தும் வகையில் அறிக்கைகள் வெளியிட்டுவருகிறது ஆனால் நமது அரசு அமைதியாக உள்ளது எங்களுக்கு மீன்பிடி உரிமையைபெற்றுத்தராவிட்டாலும் கொடுத்த கச்சத்தீவையாவது மீட்டுத்தாருங்கள் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்
பேட்டி - மகத்துவம் தலைவர் சிறுபான்மையினர் விசைபடகு மீனவர்சங்கம்
கடந்த சில நாட்களுக்கு முன் இலங்கை அரசு தரப்பில் பேச்சுவார்ததை நடைபெற்றது அதில் இலங்கை சென்று முடிவு எடுப்பதாக அறிவித்தவிட்டுச் சென்றபின் தற்போது கச்சத்தீவுப்பகுதில் நிறுத்திவைக்கப்படுள்ள இலங்கை இராணுவக்கப்பால்களால் எங்களது மீன்வர்கள் கால் வைக்க முடியாத அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் எங்கள் மாவட்டத்தை தவிர அணைத்து மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களும் அரசால் தடைசெய்யப்பட்ட வலைமீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் இதற்கு மத்திய மாநில அரசுகள் போர்கால நடவடிக்கை எடுத்து எங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றவேண்டும் இல்லையேல் இத்தொழிலைநம்பியுள்ள இந்த மாவட்ட மீன்பிடி தொழிலாளாகளையும் சார்பு தொழிலாளர்களையும் காப்பாற்ற முடியாது எனவும் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒருங்கிணைந்த போராட்டதை டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்