Breaking News

கோத்தாபயவின் வங்கிக் கணக்குகளை சோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு!

எவன்கார்ட் வழக்கு தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய காலி நீதவான் நீதிமன்றம் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

எவன்கார்ட் நிறுவன வழக்கு தொடர்பில் அதனோடு தொடர்புபட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் எவன்கார்ட் நிறுவன பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் ஆகியோரது வங்கிக் கணக்குகளை சோதனை செய்ய காலி நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.