Breaking News

பண்டாரநாயக்கவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டது! அம்பலப்படுத்தினார் மைத்திரி

தமது மேசையின் மேல் பத்திரிகைகளை வைத்து உறங்கிய காலமும் இருந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

எஸ்.டப்ளியூ.பண்டாரநாயக்க போன்று அதிகாரத்தை வைத்துக் கொண்டு துயரத்தில் இருந்த தலைவரைப் பார்த்ததில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் அவர் நாட்டிற்காக மாபெரும் வேலைகளைச் செய்துள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார். 

அத்துடன் அவரைக் கொலை செய்ய கட்சிக்குள்ளேயே சதித்திட்டம் தீட்டப்பட்டது என குறிப்பிட்ட ஜனாதிபதி மைத்திரிபால, அவ்வாறாயின் கட்சிக்குள் எவ்வாறான சதித்திட்டங்கள் நடைபெற்றன என ஊகித்துக் கொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார். 

இன்று ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்டவர்களும் உடனிருந்தனர்.