Breaking News

இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால் நாடு முன்னேறும் - கூட்டமைப்பு

தமிழ் மக்களின் உரிமை சார்ந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால், ஐரோப்பிய நாடுகளுக்கு நிகராக முன்னேறும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மன்னாரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய வடமாகாண அமைச்சர் பா. டெனீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியது முக்கியமாகவும்.

அதன் ஊடாகவே நாட்டை கட்டியெழுப்ப முடியும்.இந்த நிலையில் அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்த விடயங்களுக்கு உரிய தீர்வுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.