தமிழக்கத்தில் உட்கட்டமைப்புத் துறையில் சீனா முதலீடுகள் செய்ய வேண்டும்
தமிழகத்தில் உட்கட்டமைப்புத்துறையில் சீனா அதிக முதலீடுகள் செய்ய வேண்டும் என அந்நாட்டு தூதரிடம் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவுக்கான சீன தூதர் லீ யுசென் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்றைய தினம் தமிழக முதலைமைச்சர் பன்னீர் செல்வத்தைச் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது எதிர்வரும் மே மாதம் சென்னையில் நடைபெறவுள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில், சீன தொழிலதிபர்கள் பங்கேற்குமாறு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை, தமிழக முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை சீனாவுக்கு விஜயம் செய்யுமாறு தூதர் அழைப்பு விடுத்துள்ளார். சென்னையில் சீனாவின் துணை தூதரகம் விரைவில் அமைக்கப்படும் என அந்நாட்டு தூதர் தெரிவித்ததாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.