Breaking News

வடக்கின் பெரும் போர் ஆரம்பம்! நிதானமான ஆட்டத்துடன் பரியோவான் கல்லூரி

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் பரியோவான் கல்லூரி ஆகிய அணிகளுக்கிடையிலான மாபெரும் 'வடக்கின் 109 வது' பெரும் துடுப்பாட்டமானது யாழ்.மத்திய கல்லுரி மைதானத்தில் இன்று காலை 9.45மணியளவில் ஆரம்பமாகியது .

இதில் நாணய சுழட்சியில் வெற்றி பெற்ற யாழ்.மத்திய கல்லுரி முதலில் கடத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி யாழ்.பரியோவான் கல்லூரியணி 4 ஓவர்கள் நிறைவில் 9 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகிறது. களத்தில் அணித்தலைவர் எஸ்.கபில்ராஜ் மற்றும் உப அணித்தலைவர் எம்.சிந்துராஜன் ஆகியோர் நிதானமான ஆட்டத்துடன் ஓட்டங்களை குவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.