மோடியின் கோரிக்கையை கேலி செய்கிறது இலங்கை
அண்மையில் இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துமாறு கோரியிருந்தாலும், அதனை செய்ய வேண்டிய கட்டாயம் இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை என்று இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி.பெரெரா தெரிவித்தார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
வெளிநாட்டுத் தலைவர்கள் இலங்கைக்கு வரும்போது தாங்கள் உணர்வதைக் கூறலாம். ஆனால் எதைச் செய்யவேண்டும், எதனை செய்யக் கூடாது என்று தீர்மானிக்கும் பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே உள்ளது.
வெளிநாட்டு தலைவர் ஒருவர் கூறிவி்ட்டார் என்பதற்காக எதனையும் செய்துவிட முடியாது. வெளிநாட்டுத் தலைவர் கூறிவிட்டார் என்பதற்காக நாங்கள் எதனையும் செய்யவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. இந்நிலையில் நாங்கள் அது குறித்து ஆராய்ந்தே நடவடிக்கை எடுப்போம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.