சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணி!
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி இன்று மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணி தலைவர் McCullum முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதன்படி களம் இறங்கிய நியூசிலாந்து அணி 45 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 183 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
நியூசிலாந்து அணி சார்பாக David Elliott அதிகூடிய ஓட்டங்களாக 83 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சை பொறுத்தவரையில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Faulkner, Johnson ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை பெற்றனர். எனவே, 184 ஓட்டங்களை பெற்றால் உலகக்கிண்ணம் என்ற நிலையில் அவுஸ்திரேலிய அணி மிகவும் உற்சாகத்துடன் களம் இறங்கியது.
ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடிய அவுஸ்திரேலிய அணி 33.1 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 186 ஓட்டங்களை பெற்று 11 ஆவது உலகக்கிண்ணத்தை தனதாக்கியது. இதனால் 7 விக்கெட்டுக்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலிய அணி சார்பாக Michael Clarke அதிகூடிய ஓட்டங்களாக 74 ஓட்டங்களையும் Steven Smith ஆட்டமிழக்காது 56 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சை பொறுத்தவரையில் நியூசிலாந்து அணி சார்பில் James Henry 2 விக்கெட்டுக்களை பெற்றார்.
7-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்த அவுஸ்திரேலியா ஏற்கனவே 1987, 1999, 2003, 2007-ம் ஆண்டுகளில் உலக கிண்ணத்தை தனதாக்கியமை குறிப்பிடத்தக்கது. இன்றைய வெற்றியுடன் அவுஸ்திரேலிய அணி ஐந்து முறை உலகக்கிண்ணத்தை வென்ற ஒரே அணி என்ற பெருமையை பெறுகிறது.
கடந்த மாதம் 14 ஆம் திகதி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் ஆரம்பமாகிய 11-வது உலக கிண்ண கிரிக்கெட் போட்டி இன்று இனிதே நிறைவடைந்தது.