கூடக் கதைத்தால் வார்த்தைகள் தப்பிவிடும்! மஹிந்த ஆவேசம்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, திருமண வீடொன்றுக்குச் செல்லும் வழியில் ஹொரண, மதுராவல பிரேச சபைக்கு இன்று காலை சென்றுள்ளார். அவரது வருகையை கேள்விப்பட்டவுடன், ஊடகவியலாளர்கள் உட்பட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடினர்.
இதன்போது, ஊடகவியலாளர்களுடன் சகஜமாகப் பேசிய மஹிந்த ராஜபக்ஷவிடம், கண்டியில் நடத்தப்படவுள்ள கூட்டத்துக்குச் செல்வீர்களா? என்று ஊடகவியலாளர்கள் சிலர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், 'கண்டி கூட்டத்துக்கான அழைப்பு எனக்கு கிடைத்துள்ளது' என்றார்.
இருப்பினும், அக்கூட்டத்தில் கலந்துகொள்வாரா என்பது தொடர்பில் அவர் உறுதியாக எதுவும் கூறவில்லை. இதனால், ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அந்த கேள்வியையே எழுப்பிய போது, 'நான் கல்யாண வீடொன்றுக்குச் செல்கிறேன். சரியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்னிடமே உள்ளது. அக்கட்சியின் கொள்கைகளை நானே, சரியான முறையில் பின்பற்றுபவன்' என்று கூறினார்.
இருப்பினும், ஊடகவியலாளர்கள் கண்டி கூட்டம் தொடர்பான கேள்வியை நிறுத்தவில்லை. தொடர்ந்தும் அந்த கேள்வியையே எழுப்பினர். அதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, 'இது போதும் தானே!, கூடக் கதைத்தால் வார்த்தைகள் தப்பிவிடும்' என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.