Breaking News

அவசரப்பட்டாரா விராத் கோஹ்லி?

விராத் கோஹ்லி இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஒருநாள் ஏற்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றபோதிலும் அவர் அணி தொடர்பில் மேலும் பொறுப்புகளை ஏற்கவேண்டுமென அந்நாட்டைச் சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான எரப்பள்ளி பிரசன்னா தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண தொடரின் அரையிறுதியில் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து வெளியேறியமை குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

"உக்கிரமாக விளையாடுவதில் தவறில்லை, ஆனால் நெருப்பால், நெருப்புடன் சண்டையிட முடியாது, கோஹ்லி சிறந்த வீரர் ஆனால் சில நேரங்களில் எதிரணியை மதிக்க வேண்டும்" என எரப்பள்ளி பிரசன்னா குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான அரையிறுதியில் கோஹ்லி அவசரப்பட்டு ஆட்டமிழந்து விட்டதாக குறிப்பிட்டுள்ள பிரசன்னா இத்தொடரில் பாகிஸ்தான் அணிக்கெதிராக பெற்ற சதத்தைத் தவிர பெரிய அணிகளுடனான போட்டியில் கோஹ்லியால் சிறப்பாக பிரகாசிக்க முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

நம்பிகையுடன் விளையாடுவது நல்லது ஆனால் மற்றைய அணி வீர ர்களை மதிக்க வேண்டும் , அதுமட்டுமன்றி அரையிறுதியில் பொறுமையாக ஆடியிருக்கவேண்டுமெனவும் வேகப்பந்து வீச்சை ஒழுங்காக எதிர்கொண்டிக்கவேண்டுமெனவும் பிரசன்னா சுட்டிக்காட்டியுள்ளார்.