இலங்கை கடும் சவால்களை எதிர்கொள்ளும் - அமெரிக்கா
ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன முன்னைய ஜனாதிபதியின் தீங்குமிக்க கொள்கையிலிருந்து நாட்டை விலக்கிச் செல்கின்ற போதும் முன்னைய அரசாங்கம் விட்டுச் சென்ற நிதி சிக்கல் உட்பட பல கடுமையான சவால்களை இலங்கை எதிர்கொள்ள நேரிடுமென அமெரிக்கா கூறியுள்ளது.
இலங்கை மக்களும் சிறிசேன அரசாங்கமும் இனிவரும் மாதங்களில் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஆயினும், இலங்கையுடனான உறவை வலுப்படுத்துவதில் ஜனநாயகத்தை முன்னெடுக்க அவர்களுடன் வேலை செய்தலிலும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் செயலாளர் கெரியும் வழங்கியுள்ள உறுதிகளை நான் மீண்டும் வலியுறுத்தியுள்ளேன்' என தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் கூறினார்.
இவ்வாறான உறுதி மொழிகள் இலங்கை ஜனாதிபதியினால் கேட்கப்பட்ட வரவு - செலவுத்திட்டத்துக்கான உதவிகளில் பிரதிபலிக்கவில்லை என அவர் கூறினார். 'இந்த வரவு - செலவுத்திட்டத்துக்கான உதவிக் கோரிக்கை இலங்கை ஜனநாயகம் நோக்கிய மாற்றங்கள் ஏற்பட முன்னர் முன்வைக்கப்பட்டவை. இதனை நாம் எமது திட்டங்களில் மட்டுப்படுத்தினோம்.
இப்போது உள்ள அரசாங்கம் வித்தியாசமானது. நல்லாட்சி, பொறுப்புக்கூறல், வர்த்தகம் மற்றும் வேறு விடயங்களில் இலங்கைக்கு உதவக்கூடிய பாரிய வாய்ப்புக்களை நாம் காண்கின்றோம். முன்றைய ஆட்சியை விட ஜனாதிபதி சிறிசேனவின் ஆட்சியின் கீழ் ஜனநாயக நிறுவுதல், சமத்துவ பொருளாதார வளர்ச்சி, இனங்களுக்கிடையேயான பதற்றக்குறைவு என்பன கூடுதலாக உள்ளது' என நிஷா தேசாய் பிஸ்வால் கூறினார்.