ஹெரோயின் கடத்தல்! தமிழகத்தில் தண்டனை உறுதி
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ஹெரோயின் போதைப் பொருட்களை கடத்த முற்பட்ட வழக்கில் 4 பேருக்கு வழங்கப்பட்ட தண்டனையை சென்னை மேல் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
புதுக்கோட்டையில் இருந்து ராமேஸ்வரம் வழியாக, படகு மூலம் இலங்கைக்கு 17 கிலோ போதைப் பொருட்களை கடத்த அவர்கள் முற்பட்டிருந்தனர். இது தொடர்பில் ஏற்கனவே அவர்களுக்கு 12 வருட கடுழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கு எதிராக தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் மேன்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். எனினும் பாரிய அளவான போதைப் பொருள் தொகையை அவர்கள் கடத்தி இருந்த நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை சரியானதே என்று சென்னை மேல் நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.