வாஜ்பாய்க்கு இன்று பாரத ரத்னா விருது
முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இன்று பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளது. வாஜ்பாய் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருவதால், அவரது வீட்டுக்குச் சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி விருதை வழங்குகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். இதேபோன்று, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவிய மதன் மோகன் மாளவியாவுக்கான பாரத ரத்னா விருது, அவரது குடும்பத்தினரிடம் வரும் 30ஆம் திகதி வழங்கப்படுகிறது.