அலரிமாளிகை இராணுவச் சதி பற்றி விசாரணை அவசியம்! அநுரகுமார கோரிக்கை
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக மகிந்த ராஜபக்ஷ தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட இராணுவச் சதி தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க கோரியுள்ளார்.
மகரகமவில் இடம்பெற்ற கட்சியின் பேரணி ஒன்றில் உரையாற்றிய அவர், “இந்த சதி முயற்சி தோல்வியடைந்திருந்தாலும், இது ஒரு ஆபத்தான முன்னுதாரணமாகும். புதிய அரசாங்கம் ஒன்றைத் தெரிவு செய்திருந்த மக்களின் உரிமையை மீறும் ஒரு செயல் இது” எனவும் தெரிவித்தார்.
“சதி முயற்சி வெற்றிபெறவில்லை என்பதாலும், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதாலும் இதனை மறந்துவிடக் கூடாது. ஆனால் இந்த சதி வெற்றி பெற்றிருந்தால் என்ன நடைபெற்றிருக்கும்? இதனையிட்டு சந்தித்து முழு அளவிலான விசாரணை ஒன்றை நாம் முன்னெடுக்க வேண்டும்” எனவும் அநுதகுமார தெரிவித்தார்.