யாழ்.நுண்கலை பீட மாணவர்களின் போராட்டம் இரண்டாம் நாளாகவும் தொடர்கிறது! (படங்கள் இணைப்பு)
யாழ். பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தின் சித்திரமும் வடிவமைத்தலும் கற்கை மாணவர்கள், தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரி இன்று செவ்வாய்க்கிழமையும் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கடந்த காலத்தில் தமக்கான பரீட்சைகள் சீராக நடை பெறவில்லையெனவும் ஏனைய பீடங்களுக்கு பரீட்சைகள் முடிவுற்றுள்ள போதிலும் நுண்கலைப் பீட்த்தின் சித்திரமும் வடிவமைப்பும் கற்கைக்கான பரீட்சைகள் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்து மூன்றம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் நேற்றுத் திங்கட்கிழமை ஈடுபட்டனர்.
இந்தநிலையில் எந்த தீர்வும் கிடைக்காததால், இன்றைய தினமும் மாணவர்கள் வகுப்பு புறக்கின்பபில் ஈடுபட்டனர். இந்த வகுப்பு புறக்கணிப்பு நாளையும் தொடரும் எனவும் நாளை பதில் எதுவும் தராத பட்சத்தில் யாழ்.பல்கலைக்கழக பிரதான வளாகத்தில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் மாணவர்கள் தெரிவித்துள்ளனா்.