யாழில் ரணிலை வாய் பிளக்க வைத்த மகிந்த!
ஒரு மன்னர் போன்று வாழ நினைத்து யாழ்.காங்கேசன்துறையில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மஹிந்த அமைத்த சொகுசு மாளிகையை பார்த்து வாயை பிளந்து நின்ற பிரதமர் மாளிகையை சுற்றிச் சுற்றிப் பார்த்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றது.
வடக்கிற்கு 3 நாள் விஜயமாக வருகை தந்திருக்கும் பிரதமர் நேற்றைய தினம் காங்கேசன்துறை மற்றும் பலாலி பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது காங்கேசன்துறை பகுதியில் மஹிந்த அமைத்துக் கொண்டிருந்த ஜனாதிபதி மாளிகையை, பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது மிகப்பெருமளவு நிதியில் மிக பிரமாண்டமான அளவில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தையும், பெறுமதியான பெட்டகங்கள், மற்றும் தளபாடங்களை பார்த்து பிரதமர் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தார். தனது சகாக்களுடன் சென்ற பிரதமர் குறித்த மாளிகையின் நீர்த்தடாகம், அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான தூண்கள், விலையுயர்ந்த கூரை விளக்குகள், மற்றும் நீச்சல் தடாகம் மற்றும் பாதுகாப்பு அறை ஆகியவற்றைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளதுடன், தனது சகாக்களுக்கும் கூறியிருக்கின்றார்.
பின்னர் ஜனாதிபதி மாளிகையில் தேனீர் அருந்திய பிரதமர் குறித்த மாளிகையை அமைத்து வந்த கடற்படையினரை அழைத்து இந்த மாளிகை அமைக்கும் பணிகளை நிறுத்தவேண்டாம் உடனடியாக தொடருங்கள் என கூறியுள்ளார்.