மணல் அகழ்வை தடுக்க எவரும் முன்வரவில்லை! வளலாய் மக்கள் குற்றஞ்சாட்டு
இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுப்பதற்கு எந்த வொரு தரப்பினரும் முன்வருகின்றார்கள் இல்லை என்று வளலாய் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
25 ஆண்டு காலமாக உயர் பாது காப்பு வலயமாக இருந்து விடுவிக் கப் பட்ட வளலாய் பிரதேசத்தில் இராணுவத்தினர் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுகின்றனர் என்று அந்த மக் கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை வளலாய் கிராம சேவகர் பிரிவில் மக்கள் மீள்குடியமர்வதற்கு அனுமதிக்கப் பட்டது. வளலாய் கிராமத்தின் ஒரு பக்க எல்லையாக நீண்டு விரிந்த கடல் காணப்படுகின்றது.
இராணுவத்தினர் பகல் நேரத்திலேயே தமது உழவு இயந்திரங்களைக் கொண்டு மணலை அனுமதியின்றி ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். இராணு வத்தினரின் இந்த நடவடிக்கையால் கடல் நீர் உட்புகும் அபாயம் காணப் படுகின்றது என்று மக்கள் கூறு கின்றனர்.