ஊடக உபகரண கொள்வனவிற்கு ஊடகவியலாளர்களிற்கு நிவாரணக்கடன்
இலங்கையில் ஊடகவியலாளர்களிற்கு வெகுசன உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக நிவாரணக்கடன் வசதி வழங்குவதற்கு ஊடக அமைச்சு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட இலத்திரணியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களில் முழுநேர அல்லது பகுதிநேர அடிப்படையில் சேவையாற்றும் ஊடகவியலாளர்கள், முழு நேர பணியில் ஈடுபடும் ஊடக தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர்கள் 3 வருட சேவையைப் பூர்த்தி செய்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.
மோட்டார் சைக்கிள், கணினி, புகைப்படக்கருவிகள் கொள்வனவு செய்ய தலா 1 லட்சம் ரூபாவும் தொலைநகல் கருவி (பக்ஸ்), டிஜிட்டல் ஒலிப்பதிவுக் கருவி கொள்வனவு செய்ய தலா 15 ஆயிரம் ரூபாவும் நிவாரணக்கடனாக வழங்கப்படவுள்ளது.
ஊடக அமைச்சின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட தெரிவுக் குழுவினால் தகைமையுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படுவர்.
விண்ணப்பங்களை ஏப்ரல் 3 ஆம் திகதிக்கு முன் கிடைக்கக்கூடியவாறு பணிப்பாளர் (ஊடகம்) ஊடக அமைச்சு, இல 163, கிருளப்பனை மாவத்தை, பொல்ஹேன்கொட, கொழும்பு – 05 என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கடித உறையின் இடது பக்க மேல் மூலையில், "ஊடகவியலாளருக்கான ஊடக உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கான நிவாரணக்கடன் வசதி வழங்கல் 2015" என குறிப்பிட்டு அனுப்புமாறும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவிதாரண கேட்டுக் கொண்டுள்ளார்.