மணிரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' தெலுங்கில்!
மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’. இப்படத்தில் துல்கர் சல்மான்-நித்யாமேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
‘அலைபாயுதே’ பாணியிலான காதல் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். வருகிற ஏப்ரல் 17-ந் தேதி படத்தை வெளியிட மும்முரமாக பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் இப்படத்தை வெளியிடவிருக்கின்றனர்.தற்போது இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ‘ஓ பங்காரம்’ படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தெலுங்கு பதிப்பில் பிரபல தெலுங்கு நடிகரான நானி துல்கர் சல்மானுக்கு டப்பிங் பேசுகிறார். வேறொரு நடிகருக்கு டப்பிங் கொடுப்பது இதுதான் முதல் முறை என நானி தெரிவித்துள்ளார்.