எதிர்க்கட்சி தலைவர் விவகாரம்! உடனடியாக தீர்மானிக்க முடியாது - சபாநாயகர்
எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து தன்னால் உடனடியாக தீர்மானம் எதனையும் மேற்கொள்ள முடியாது என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் தெளிவின்மை காணப்படுவதையிட்டு விளக்கமளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபையில் புதிய நிலைமையொன்று தோன்றியுள்ளது. எனவே, இது தொடர்பில் கிடைக்கக் கூடிய உதாரணங்களை கவனமாக ஆராய்ந்து தீர்ப்புக் கூறுவது சபாநாயகரை பொறுத்த விடயமாகும் என்றார்.
நாடாளுமன்ற மரபுகள் மற்றும்; நிலையியல் கட்டளையிட்டு பெரிதும் பேசுகின்ற பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் தொடர்பில் இன்று மௌனமாக இருப்பது ஆச்சமரியமாகவுள்ளதென மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுகுமார திஸாநாயக்க கூறினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தான் 11 வருடங்கள் எதிர்க்கட்சிய தலைவராக இருந்தேன். அப்போது பிரச்சினைகள் ஏற்படவில்லை என சற்று நகைச்சுவையாக கூறினார். இருப்பின் இது, சபாநாயகர் தீர்மானிக்க வேண்டிய விடயமாகும்.
1948இல் டாக்டர் என்.எம். பெரேரா, எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்க மறுத்த போது இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டது. மேலும் முன்னாள் பிரதமர் நீதியரசர் சரத் என் சில்வா, எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் ஜனாதிபதி, அமைச்சரவைக்கு நியமிக்கலாம் என தீர்மானித்துள்ளார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.
இவற்றை கருத்திற் கொண்டே இந்த விவகாரம் தொடர்பில் சபாநாயகர் தீர்மானிக்க முடியும் என அவர் கூறினார். மேலும், 1914இலிருந்து பிரித்தானிய நாடாளுமன்ற முறைமையிலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உதாரணங்களை காட்டினார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் சுசில் பிரேம ஜயந்த இந்த பிரச்சினையை தீர்ப்பதில் சபாநாயகர் பல குழப்பங்களையும் முரண்பாடுகளையும் எதிர்கொள்வார். அடிக்கடி கட்சிமாறுவதனால் நாடாளுமன்றில் அமைப்புக்கோலத்தை எவரும் இலகுவில் தீர்மானிக்க முடியாதென என்றும் அவர் கூறினார்.