Breaking News

ஏ.பி. டிவிலியர்ஸ் மீது கவனம்! இலங்கை அணிக்கு ரணில் எச்சரிக்கை

உலகக் கிண்ண தொடரில் விளையாடிவரும் இலங்கை அணிக்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்து தெரிவித்தது மட்டுமன்றி தென்னாபிரிக்க அணியின் தலைவர் ஏ.பி. டிவிலியர்ஸ் தொடர்பில் கவனமாக இருக்கும்படியும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"நீங்கள் எமது நாட்டின் பெருமை' எனத் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் , இத்தொடரில் சிறப்பாக விளையாடிவரும் டிவிலியர்ஸ் மீது கவனமாக இருக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளார். பலவீனங்களை கற்றுக்கொண்டு , வியூகங்களை அதற்கேற்ப வகுத்தால் வெற்றிபெற முடியும் பிரதமர் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோல் உலக க் கிண்ண தொடரில் காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ள இலங்கை அணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.உலகக் கிண்ண தொடரின் காலிறுதிப் போட்டியில் இலங்கை அணி, தென்னாபிரிக்க அணியை எதிர்வரும் புதன்கிழமை சிட்னியில் எதிர்கொள்கின்றது.