Breaking News

பளையில் கோர விபத்து! இருவர் பலி

பளைப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் ஏ 9 வீதியில் பளைக்கும் புதுக்காட்டுச் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றது.

இன்று புதன்கிழமை காலை நெல்லியடிப் பகுதியில் இருந்து தென்னிலங்கைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியின் முன்பக்க ரயர் வெடித்து மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். 

லொறி மோதியதில் மரம் அடியோடு சாய்ந்தது. லொறி முற்றாகச் சிதைந்து சின்னாபின்னமானது. லொறிச் சாரதியான புத்தூர் வடக்கைச் சேர்ந்த குகதாசன் (வயது 59) என்பவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். 

கரணவாய் வடக்கு, கரவெட்டியைச் சேர்ந்த தெ.ரெங்கநாதன் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இவரது சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆவரங்காலைச் சேர்ந்த ராமலிங்கம் தர்மலிங்கம் (வயது 58) என்பவர் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார். விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.