இனி ஜோதிடத்தை நம்புவதில்லையாம்! -மஹிந்த
பாகிஸ்தான் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தான் தொடர்ந்தும் ஜோதிடத்தை நம்ப போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
ஜந்து நிமிட குறுகிய காலத்திற்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இடம்பெற்ற நேர்காணல் குறித்த வெளிநாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது.
உரையாடலில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம் மக்கள் என்னை கைவிட்டு சென்றதனால் தான் பலவிதமான சர்வதேச தாக்கங்களுக்குள்ளாகியதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாகிஸ்தானில் உள்ள கலகங்களை நிறுத்திக்கொண்டால் நாடு செழிப்படையும் என தெரிவித்துள்ளார். இறுதியாக குறித்த பத்திரிகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் நீங்கள் இன்னமும் ஜோதிடத்தை நம்புகிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னாள் ஜனாதிபதி இல்லை நான் இனியும் ஜோதிடத்தை நம்பப்போவதில்லை என கூறியுள்ளார்.