ஐ.நா விசாரணைக் குழுவுக்கு மேலதிக நிதி ஒதுக்கப்படாது
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் நியமிக்கப்பட்ட, விசாரணைக்குழுவுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படாது என்று, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கை இந்த மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் தான் அது செப்ரெம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளுக்குத் தேவையான நிதி ஐ.நா பொதுச்சபையினால் அனுமதிக்கப்பட்டிருந்தது.எனவே, மேலதிக நிதி ஒதுக்கீடுகள் ஏதும் செய்யப்படத் தேவையில்லை.” என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் திட்ட உதவி மற்றும் முகாமைத்துவ சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக, இந்தமாதத்துடன் ஐ.நா விசாரணைக் குழுவின் பணிக்காலம் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.