Breaking News

இராணுவத்தை வெளியேற்றா விட்டால் போராட்டம் வெடிக்கும்! மாவை கோரிக்கை

வலிகாமத்திலும் சம்பூரிலும் மக்களை மீள்குடியேற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அதனைபெரிதும் வரவேற்றனர். 

ஆனால், அரசின் தற்போதைய நடவடிக்கைகளைப் பார்க்கும்போது எமக்கு கவலையும் விசனமும்தான் ஏற்படுகிறது. 25 வருடங்களின் பின்னர் தமது சொந்த இடத்தை வீட்டை காணியைப் பார்க்கலாம் என்ற ஆவலோடு கடந்த வெள்ளிக்கிழமை (நேற்று முன்தினம்) வயாவிளான் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குச் சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் அழுதவாறு திரும்பி யுள்ளனர். இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மாவை சேனாதிராசா நேற்றுத் தெரி வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் இருக்கும் வலிகாமத்தில் ஆயிரத்து நூறு ஏக்கர் நிலப்பரப் பையும், சம்பூரில் ஆயிரத்து ஐம்பத்து இரண்டு ஏக்கர் நிலப்பரப்பையும் விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருந்தது. அதற் கமைய கடந்த 13ஆம் திகதி வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வளலாய் கிராமசேவையாளர் பிரிவு மக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிலையில், வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வயாவிளான் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவு நேற்று (நேற்றுமுன்தினம்) விடுவிக்கப்ப டும் என்று அரசால் அறிவிக்கப்பட் டிருந்தது. 

இந்த அறிவிப்புக்கு அமைய குறித்த கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த மக்களை அரச அதிகாரிகள் நேற்று (நேற்று முன் தினம்) அழைத்துச் சென்றனர். ஆனால், வல்லை அராலி பிர தான வீதியைத் திறந்து விட்ட இரா ணுவத்தினர், வீதியின் இரு மருங்கிலும் உள்ள காணிகளுக்குள் செல்ல பொதுமக்களை அனும திக்கவில்லை. பிரதான வீதியின் இருபுறமும், பொது மக்களின் சில வீடுகளிலும் அமைக்கப்பட்ட இராணுவ முகாம் கள் அப்படியே இருக்கின்றன. அவற்றுக்கு முன்பாக புதிதாக நிரந்தர பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி களில் இராணுவத்தினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். 

அதேவேளை, இராணுவ முகாம்கள் அமைக்கப்படாத வீடுகள் மற்றும் ஆலயங்கள் அடியோடு இடித் தழிக்கப்பட்டுள்ளன. வீதிகள் கூட அடையாளம் தெரியாதவாறு அழிக் கப்பட்டுள்ளன. இதேவேளை, வயாவிளான் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவுக்குட் பட்டமக்கள் வசிக்கும் பகுதிகளான ஒட்டகப்புலம், தோலகட்டி, வடமூலை ஆகிய பகுதிகளுக்குள் மக்கள் செல்வதற்கு நேற்று (நேற் றுமுன்தினம்) அனுமதிக்கப்பட வில்லை. அந்த இடங்களுக்குச் சென்ற மக்களை இராணுவத்தினர் தடுத்துநிறுத்தியுள்ளனர். 

25 வருடங்களின் பின்னர் தமது சொந்த இடத்தை வீட்டை காணியைப் பார்க்கலாம் என்ற ஆவலோடு வெள்ளிக்கிழமை வயாவிளான் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்குச் சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் கதறியழுதவாறு திரும்பி யுள்ளனர். தமது சொந்த இடங்களில் மீள்குடியேற வேண்டும் என்று கோரியே இந்த மைத்திரி அரசுக்கு ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் மக்கள் ஆணை வழங்கினர். ஆனால், இராணுவத் தைத் திருப்திப்படுத்தும் விதத்தில் தான் மீள்குடியேற்ற விடயத்தை அரசு கையாள்கின்றது. இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். 

வடக்கு, கிழக்கில் இராணுவத்தை முழுமையாக வெளியேற்றி மக்களை உரிய முறையில் அரசு மீள்குடியேற்ற வேண்டும். இல்லை யேல்சொந்த நில மீட்புக்கான தமிழரின் அஹிம்சைப் போராட் டம் மீண்டும் வெடிக்கும். இதனை நாம் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை நேரில் சந்தித்துத் தெரிவிக்கவுள்ளோம். 

எதிர்வரும் 23ஆம் திகதி யாழ்ப் பாணத்திற்கு பயணம் மேற்கொள் ளவுள்ள அரச தலைவர்கள், இராணுவத் தலையீடுகள் இல்லாத தமிழ் மக்களின் சுதந்திரமான மீள் குடியேற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தவேண்டும். தமிழ் மக்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு உரிய முறையில் உடன் மீள்குடியேற்ற வேண்டும் என்றார்.