Breaking News

யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதனாயகன் கடமைகளை பொறுப்பேற்றார்!

யாழ் மாவட்டத்திற்கான புதிய அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ள நாகலிங்கம் வேதனாயகன் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

யாழ் மாவட்டதிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அரச அதிபர் இன்று தமது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவின் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த நாகலிங்கம் வேதனாயகன் கடந்த வாரம் யாழ் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதேவேளை யாழ் மாவட்டத்தின் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த சுந்தரம் அருமைநாயகம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.