இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீற தடை!
வருடம் ஒன்றுக்கு 83 நாட்களுக்கு இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடியில் ஈடுபட அரசாங்கம் இணக்கம் வெளியிட்டதாக வெளியான தகவலை பிரதி வெளியுறவு அமைச்சர் அஜித் பி பெரேரா மறுத்துள்ளார்.
அடுத்த வருடம் முதல் மூன்று வருடங்களுக்கு வருடம் ஒன்றுக்கு 83 நாட்களுக்கு இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிக்க, தமிழக மீனவர்கள் அனுமதிக்கப்படுவர் என இந்திய ஊடகங்கள் செய்தியை வெளியிட்டிருந்தன.
இதேவேளை இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறும் செயல்களை தடுக்கும் இலங்கை நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்று பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கவும் இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்திருந்தார். இதன்போது அவர் கூறிய வார்த்தைகள் கண்டிக்கப்பட்டன.
எனினும் அத்துமீறுவோருக்கு எதிராக இலங்கையர்களின் எண்ணங்களையே பிரதமரின் கருத்துக்கள் வெளிப்படுத்தின என்று அஜித் பி பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.