Breaking News

வடமாகாணசபை தீர்மானம் சம்பந்தனுக்கே தெரியாதாம்-சுமந்திரன் (காணொளி இணைப்பு)


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.ஏ சுமந்திரன் அண்மையில் கனடா சென்றவேளை அவர் ஏற்பாட்டாளர்களால் அழைக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய பேட்டியில் பல விடயங்களுக்கு தனது கருத்துககளை தெரிவித்திருந்தார்.

அதன்போது த.தே.கூட்டமைப்பு ஏற்கனவே நான்கு கட்சிகளை உள்ளடக்கிய கூட்டமைப்பாக பதிவு செய்யப்பட்டுவிட்டதாகவும் ஐந்தாவது கட்சியாக பதிவு செய்ய வேண்டிய தேவை இல்லாததால் தான் பதிவு செய்யப்படவில்லை எனறும், கட்சி பின்னணியில் சிக்கல் இருப்பவர்களே பதிவை வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார்.

அடுத்த தேர்தலில் யாழ்மாவட்டத்தில் போட்டியிடப்போவதாகவும் அங்கு கீரைக்கடைக்காரன்முதல் அனைவரும் தனது நிலைப்பாட்டை வரவேற்பதாகவும் தெரிவித்த அவர் ரணில்-விக்கினேஸ்வரன் முறுகல் தொடர்பாக தெரிவிக்கையில் இருவரும் சிறுவர்கள் போல் சண்டைபிடிப்பதாகவும் இருவருக்கும் தான் அறிவுரை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

வடமாகாணசபை தீர்மானம் தொடர்பாக தெரிவித்த அவர் தனக்கோ அல்லது சம்பந்தனுக்கோ இது தொடர்பில் தெரிந்திருக்கவில்லை எனவும் அவருக்கு ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

பேட்டி முழுமையான விபரம் உங்கள் பார்வைக்காக

TNA ஒரு கட்சியாக பதிவு செய்வது பற்றி உங்கள் கருத்து என்ன ? TNA க்கு புலம்பெயர்ந்த மக்களின் ஆதரவு தேவையா ?



ஜெனிவா அறிக்கை பிற்போடப்பட்டதால் தமிழர்களுக்கான சாதக பாதக நிலமைகல் என்ன ?
   

 காணி கையகப் படுத்துதல் தொடர்பானவை 




 உருவப் பொம்மை எரிப்பு பற்றி, சுமந்திரன் தேர்தலில் நிற்பது பற்றி 


புலம்பெயர்ந்த தமிழர்களது போராட்டம் பற்றி புலம்பெயர்ந்த தமிழர்களது போராட்டம் பற்றி 



M.A சுமந்திரன் அவர்கள் CMR தமிழ் பண்பலைக்கு வழங்கிய நேர்காணல்