”நோ பயர் சோன்” ஆவண படத்தை இலங்கையில் வெளியிட தடை!
நோ பயர் சோனின் சிங்கள மொழிப்பெயர்ப்பு ஆவணப்படத்தை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதாக, வெளியுறவுத்துறை பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
சனல்4 வீடியோ காட்சிகளால் இலங்கைக்கு எவ்வித பாதிப்புக்கள் ஏற்படவில்லை. இதனையடுத்தே அதனை சிங்கள மொழிப்பெயர்ப்பில் வெளியிட்டுள்ளார்கள் என்று பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் இதன் காரணமாக நாட்டுக்கு பாதிப்பு ஏற்படாது என்று பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்த வீடியோ காண்பிக்கப்பட்ட போதும் உரிய பொறுப்புக்கூறல் இருக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் பிரித்தானியா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், நோ பயர் சோனின் சிங்கள மொழி பதிப்பை, இலங்கையில் வெளியிட அனுமதிக்குமாறு கெலம் மெக்ரே அனுமதி கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.