Breaking News

லலித்-குகன் வழக்கு ஒத்திவைப்பு!

லலித்- குகன் வழக்கு எதிர்வரும் யூலை 30 ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் லலித் - குகன் தொடர்பிலான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 


வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் எதிர்வரும் யூலை 30 ஆம் திகதிக்கு மீண்டும் வழக்கை ஒத்திவைத்துள்ளது . லலித் மற்றும் குகன் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதி கடத்தப்பட்டு காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.