சிறுமி கடத்தல்! ராஜித மற்றும் குடும்பத்தினரை நீதிமன்றில் ஆஜராக அழைப்பாணை
சிறுமியொருவரை கடத்திய விவகாரம் தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன , அவரது மனைவி, 2 மகன்கள் உட்பட 14 பேரை ஏப்ரல் 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும் படி கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
பராயமடையாத தமது மகளை அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இரண்டாவது மகன் கடத்திச் சென்று பலவந்தமாக தடுத்துவைத்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியிருந்தனர். கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அமைச்சுக்குரிய வாகனமொன்றில் வந்த அமைச்சர் ராஜித சேனாரத்னவின் புதல்வர் தமது மகளை கடத்திச் சென்றதாக சிறுமியின் பெற்றோர் தெரிவித்தனர்.
அமைச்சர் ராஜிதவின் 2 ஆம் புதல்வரான 27 வயதன ஹர்ஜித் சேனாரத்னவே 17 வயதான தினிதி ஆலோகா ரனசிங்ஹ எனப்படும் தமது மகளை தடுத்து வைத்துள்ளதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.