Breaking News

காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டது ஜனாதிபதி மாளிகை இல்லையாம்! மஹிந்த

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டது ஜனாதிபதி மாளிகை அல்ல என முன்னாள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாறாக ஜனாதிபதி செயலகத்தின் கீழ் சர்வதேச தொடர்புகளைப் பேணிவருவதற்கான ஒரு மத்திய நிலையமாகவே அது நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

காங்கேசன்துறையில் ஜனாதிபதி மாளிகை ஒன்று அமைக்கப்படுவதாகவும், அதனை தனக்காக பயன்படுத்தாமல் மக்களின் உடமையாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த அவர், காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுவரும் ஜனாதிபதி மாளிகைக்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டிருந்தார். இந்த நிலையில் அங்கு அமைக்கப்பட்டுவருவது சர்வதேச தொடர்புகளைப் பேணிவருவதற்கான ஜனாதிபதி செயலகப் பிரிவுகளில் ஒன்றாகும் என்று முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது குறித்த அறிக்கை ஒன்றையும் அவர் விடுத்திருக்கிறார்.

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அந்த மாளிகை நிர்மாணிக்கப்படுவதாக வெளியான குற்றச்சாட்டுக்களையும் அவர் தனது அறிக்கையில் நிராகரித்துள்ளார். இதனை நிர்மாணிப்பதற்கான அனுமதியை அன்றிருந்த அமைச்சரவை வழங்கியிருந்தமையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.