விக்னேஸ்வரன் மீது ரணில் காட்டம்! தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் இணைப்பு
இலங்கை அரசாங்கம் தமிழர்களை இனப்படுகொலை செய்ததாக வடக்கு மாகாணசபை அண்மையில் நிறைவேற்றிய தீர்மானம் குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து ஒளிபரப்பாகும் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலின் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
“முதலமைச்சரால் மிகவும் பொறுப்பற்ற முறையில் அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற தீர்மானங்களை அவர் நிறைவேற்றும் போது முதலமைச்சருடன் நாங்கள் தொடர்பு கொள்வது கடினமானதாகிறது.
இந்த விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஏனைய தலைவர்களுடன் பேசி வருகிறோம். போரில், எல்லாத் தரப்பு மக்களும் கொல்லப்பட்டனர். தமிழர்களுடன் முஸ்லிம்களும், சிங்களவர்களும் கூட கொல்லப்பட்டனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.