மீனவர் தாக்கப்பட்டால் உறவுகள் பாதிக்கப்படும் - கருணாநிதி
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதல் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் முத்துவேல் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
முக்கியமாக இலங்கைத் தமிழர்களின் நலனை பாதுகாப்பதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை வருந்தத் தக்கது என்றும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கு சமவுரிமை வழக்கப்பட வேண்டும் என்று நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார்.
இந்தநிலையில் தமிழர்களின் பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சினை தொடர்வதை இந்த தாக்குதல் நிரூபித்துள்ளதாக கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.