Breaking News

முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்த நடைபவனி நல்லூர் ஆலய முன்றலில் நிறைவு! (படங்கள் இணைப்பு)

காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரியும் ஐ.நா நீதியான விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் நல்லூர் ஆலய முன்றலில் கடந்த மூன்று நாள்களாக மேற்கொள்ளப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டமும் நடைபயணமும்  இன்று பிற்பகலுடன் முடிவடைந்தது. 


கடத்தப்பட்டும், சரணடைந்தும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் உண்மை நிலையை வெளியிட வலியுறுத்தியும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும்,பிற்ப்போடப்பட்ட ஐ.நா அறிக்கையை வலியுறுத்தியும் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து முள்ளிவாய்க்காலில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் இன்று நல்லூரை வந்தடைந்ததோடு போராட்டமும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

நான்கு நாட்களாக நடைபயணத்தில் கலந்து கொண்ட போராட்டக் குழுவினர் இன்று மதியம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். அதன் பின்னர் செல்வநாயகம் நினைவு தூபிக்கும் ,தமிழாராய்ச்சி படுகொலை நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தினர். 

அதன் பின்னர் காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரியும் ஐ.நா நீதியான விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் நல்லூர் ஆலய முன்றலில் கடந்த மூன்று நாள்களாக மேற்கொள்ளப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டத்திலும் கலந்து கொண்டு போராட்டத்தை நிறைவுக்கு கொண்டு வந்துள்ளனர்.

இந்த நடைபவனியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவை வழங்கியதோடு போராட்டத்திலும் கலந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்தனர்.