அரசியல் கலாச்சாரத்தில் மாற்றம் தேவை - ஜே.வி.பி
இலங்கையில் தேர்தல் முறைமைகளில் மாற்றங்களை செய்வதை விட அரசியல் கலாச்சாரத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதன் மூலமே நல்ல பலனைப் பெற முடியும் என்று ஜே.வி.பியின் மத்திய குழுவின் உறுப்பினரான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பில் செய்ய உத்தேசித்துள்ள மாற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜேவிபியின் மைத்திய குழு இன்று சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.
அதில், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை ஆதரிப்பது, ஆனாலும் தற்போதைய தேர்தல் முறையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் சில பரிந்துரைகளை செய்வது ஆகியவை குறித்து அந்த மத்திய குழு சில தீர்மானங்களை எடுத்துள்ளது.என தெரிவித்துள்ளார்.