புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலை திறந்துவைப்பு
புதுக்குடியிருப்பு பிரதேச வைத்தியசாலை இன்று வியாழக்கிழமை நண்பகல் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண ஆளுநர் பலிஹக்காரா ஆகியோரால் இன்று வியாழக்கிழமை பகல் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழர் சம்பிரதாயப்படி கீழைத்தேய வாதியங்கள் நடன நிகழ்வுகளுடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு வைத்தியசாலை வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் விநோ நோதராதலிங்கம், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன், வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் மேரிகமலா குணசீலன் வைத்தியர் சிவமோகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.