தேர்தலை தாமதப்படுத்தினால் போராட்டம்! எச்சரிக்கும் ஜே.வி.பி
அரசாங்கம் வாக்குறுதியளித்ததைப் போன்று ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கபட்டு, பொது தேர்தல் நடத்தவில்லை என்றால் தங்கள் கட்சி பாராளுமன்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கே.டி.லால்காந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்துவதற்காக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கிய சில அரசியல் கட்சிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆதரவுகளையும் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிலர் தேசிய அரசாங்கம் குறித்து கூறிக்கொண்டு தேர்தலை தாமதப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.