இன்று யாழ்ப்பாணம் வருகிறார் ஜனாதிபதி
வடக்கு மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டத்திற்காக இன்று யாழ்ப்பாணத்துக்கு வருகிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதலாவது வடக்கிற்கான பயணமாக இது அமைகின்றது.இன்று காலை 9.30 மணிக்கு வரும் அவர் மூன்று மணி நேரமே இங்கு நடக்கு நிகழ்வுகளில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் வரும் மைத்திரிபால சிறிசேன, நல்லூர் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடுவார்.
இதன் பின்னர் மாவட்ட செயலகத்தில் நடக்கும் வட மாகாண அபிவிருத்திக் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்துவார். கூட்டத்தை 12 மணிக்கு நிறைவடைந்ததும் 12.30 மணிக்கு திருகோணமலையில் நடக்கும் கிழக்கு மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டத்துக்கு செல்வார் எனத் தெரிவிக்கப்பட்டது.